▼

திங்கள், 28 செப்டம்பர், 2026

துளிகள் - 64 - ஆத்மார்த்தமான பக்தியே தெய்வ சாநித்யம்!


ஒரு மனிதன் உழன்று, சிதிலப்பட்டு, பக்குவப்பட்டு, வேதனைப்பட்டு, கவலைப்பட்டு, கஷ்டப்பட்டு தன்னைத் தானே மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் இறையின் எண்ணம்.

தெய்வ சாநித்யம் என்பது ஆத்மார்த்தமான பக்தியினால் வருவதாகும். அது புறத்தைப் பொறுத்ததல்ல. எனவே, எந்த ஆலயத்திலும் மனம் ஒன்றி, மனதிலே எந்த விதமான தீய எண்ணங்களும் எழாமல், வைராக்கியம் கொண்டு, மனதைத் தெளிவாக வைத்து, வேறு உலக சிந்தனை எதுவும் எழா வண்ணம் இறையை இல்லத்திலிருந்து பூசித்தாலும், அது நல்ல உள்ளத்திலிருந்து வரும் பூஜையாக இருக்கும்கால் இறைவனின் அருளும், இறைவனின் சாநித்யமும் கிட்டும்.

இந்நிலையில் இறைவனின் அருளாசி நிச்சயம்.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக