பலகீனமான மனம் கொண்ட மனிதனை விதி, இன்னமும் அவன் செய்த பாவங்களுக்கு ஏற்ப மேலும் பாவத்தைச் சேர்க்க வைத்து, தாங்கொணா நரகத்தில் தள்ளிவிடும் என்பதால்தான் ஸ்தல யாத்திரையும், பிரார்த்தனையும், தர்மமும், சத்தியமும் தொடர்ந்து செய்யச் செய்ய, அவன் விதி மெல்ல மெல்ல மாறி, அவனை மென்மேலும் அறவழியில் திசை திருப்பும்.
அதற்குத்தான் நாங்கள் ஆலய தரிசனம், கூட்டுப் பிரார்த்தனை, தனி மனித பிரார்த்தனை, தர்ம காரியங்கள் செய்ய அருளாணை இட்டுக்கொண்டே இருக்கிறோம். இவற்றைத் தன்முனைப்பு இல்லாமல் செய்வதால், எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்வதால், ஒருவனின் மனம் திடம் பெறுகிறது. ஒருவனின் மனம் வைராக்யம் பெறுகிறது. ஒருவனின் மனம் பரம்பொருள் மீது ஐக்கியமாகிறது. ஒருவனின் மனம் வைரம் போல் உறுதியாகிறது.
இதனால் எந்தவிதமான எதிர்ப்புகளையும், எந்தவிதமான வாழ்க்கைச் சூழலையும் தடுமாற்றமில்லாமல் வாழ்வதற்குண்டான ஒரு திறனை மனிதன் பெறுகிறான். எனவேதான் பிரார்த்தனையும், பிரார்த்தனையோடு கூடிய நல்லவிதமான அறச்செயலும் ஒரு மனிதனுக்குத் தேவை என்பதை எப்பொழுதுமே வலியுறுத்தி வருகிறோம்.
வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக