▼

சனி, 19 செப்டம்பர், 2026

துளிகள் - 60 - பஞ்சபூதங்களிலிருந்து உயிர்ச் சக்தியைப் பெறும் யோக முறை!


செடி, கொடிகளைக் கொன்றுதான் மனிதர் இந்த பூமியில் வாழ வேண்டுமா? வேறு மாற்று வழியில்லையா?

மனிதனாகப் பிறந்து விட்டாலே பாவங்கள் செய்துதான் ஆக வேண்டும் என்பதற்கு இந்த வினாவும் ஒரு உதாரணம். ஆனாலும் ஐம்புலனை சரியாகக் கட்டுப்படுத்தி யோக நிஷ்டையில் அமர்ந்து யோக மார்க்கத்தில் செல்லக்கூடிய ஒரு பாக்கியம் பெற்ற ஆத்மாக்கள் ஐம்பூதங்களில் இருந்து தன் உடலுக்குத் தேவையான சத்துக்களை எடுத்துக் கொள்ள முடியும்.

காட்டிலிருந்தும், தன்னைச் சுற்றியுள்ள கதிர்வீச்சிலிருந்தும், சூரிய, சந்திர ஒளியிலிருந்தும், மண்ணிலிருந்தும் கூட அந்தந்த பொருளின் புற பாதிப்புகள் ஏதும் இல்லாமல் தன் உடல் சோரா வண்ணம் தேவையான சத்துக்களைக் கிரகிக்க முடியும்.

இதற்கு “பஞ்சபூத சாஸ்திர சக்தி தத்துவ முறை” என்று பெயர். இவற்றையெல்லாம் சராசரி மனிதனால் உடனடியாகப் பின்பற்ற முடியாது.

வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக