முதலில் ஆலய குளத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும். குளித்த பின் கோவிலுக்குள் செல்லும் பொழுது ஆடவர்கள் கட்டாயம் மேல் ஆடை அணியக்கூடாது. திருநீறு அல்லது திருமண் அணிய வேண்டும். ஆடை தூய்மையாக இருக்க வேண்டும். கூடுமானவரை பருத்தி ஆடை நல்லது.
பிறகு ராஜகோபுரத்தை நன்றாக தரிசித்து வணங்க வேண்டும். உள்ளே சென்று முதலில் துவஜ ஸ்தம்பத்தின் அடியில் உள்ள விநாயகரை வழிபட்டுவிட்டு, ரிஷபத்தை வழிபட்டு, துவார சக்திகளை வணங்கிவிட்டு மூலஸ்தானம் செல்ல வேண்டும்.
பிறகு அந்தந்த பரிவார தேவதைகளை வணங்கிவிட்டு, பின்னர் அன்னையை வணங்கி, கடைசியாக நவகிரகங்களை வணங்கிவிட்டு, மீண்டும் துவஜ ஸ்தம்பத்தின் அடியில் சாஷ்டாங்கமாய் வீழ்ந்து வணங்க வேண்டும்.
பிறகு ஏகாந்தமாய் ஓரிடத்தில் அமர்ந்து, மனம் ஒன்றி இறையை எண்ணி தியானம் செய்ய வேண்டும். பிறகு பதட்டமின்றி எழுந்து, ஆலயத்தை அண்ணாந்து வணங்கி வெளியே வர வேண்டும்.
வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக