கோடி, கோடியாக தர்மம் செய்ய வேண்டுமா?
தர்மத்தின் தன்மை கொடுக்கின்ற பொருளின் அளவைப் பொருத்ததல்ல. கொடுக்கின்ற மனிதனின் மனதைப் பொருத்தது.
கோடி, கோடியாக அள்ளித் தந்துவிட்டு, தனிமையில் அமர்ந்துகொண்டு, ‘அவசரப்பட்டு விட்டோமோ? நமக்கென்று எடுத்து வைத்துக் கொள்ளாமல் கொடுத்து விட்டோமோ?’ என்று ஒரு தரம் வருத்தப்பட்டாலும், அவன் செய்த தர்மத்தின் பலன் வீணாகிவிடும்.
ஆனால் ஒரு சிறு தொகையைக்கூட மனமாரச் செய்துவிட்டு, மிகவும் மனம் திறந்து, ‘இப்படியொரு வாய்ப்பு கிடைத்ததே?’ என்று ஒருவன் மகிழ்ந்தால், அது கோடிக்குச் சமமாகும்.
வாக்குரைத்தவர்: அகத்தியப்பெருமான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக